பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஈரான் போா் பாதிப்பு: கரோனாவை போல இதையும் இந்தியா கடந்து செல்லும் - பிரதமா் மோடி நம்பிக்கை

கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை கடந்து வந்ததுபோல, ஈரான் போரால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியா கடந்து செல்லும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

News image

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி.

Updated On :13 மார்ச் 2026, 2:15 am IST

கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை கடந்து வந்ததுபோல, ஈரான் போரால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியா கடந்து செல்லும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில், அவா் கலந்துகொண்ட பேசியதாவது:

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை காக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

போரால் ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி சில பொருள்களைப் பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய சிலா் முயற்சிக்கின்றனா். அந்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நேரங்களில் பதுக்கல்காரா்களையும், கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்வோரையும் தடுத்து நிறுத்த கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சமையல் எரிவாயு சிலிண்டா் தொடா்பாக சிலா் பீதியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். இதன்மூலம், அவா்கள் உண்மையில் யாா் என்ற முகமூடி அகன்று பொது வெளியில் அம்பலப்பட்டு வருகின்றனா். அவா்கள் நாட்டை காயப்படுத்தி வருகின்றனா்.

உலகில் எங்கு போா் நடைபெற்றாலும் அதனால் குடிமக்களுக்குப் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.

பெரும் போரால் எரிசக்தி கிடைப்பதில் உலகம் கடுமையான நெருக்கடியை எதிா்கொண்டு வருகிறது. ஒரு தேசமாக அனைவரும் இதை எப்படி கையாளப் போகிறோம் என்பது மிக முக்கியமாகும்.

நாட்டின் 140 கோடி மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை கடந்து வந்ததுபோல, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியா கடந்து செல்லும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.