மிஸோரத்தில் கனமழை: 15 பேர் பலி, இயல்பு வாழ்க்கை முடக்கம்!
கல் குவாரியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.


வடகிழக்கு மாநிலமான மிஸோரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனிடையே, தலைநகர் அய்ஸால் அருகே உள்ள ஒரு கல் குவாரியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதையடுத்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதோடு, அரசுப் பணியாளர்களும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஹந்தர் அருகே, அய்ஸாலுக்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு சலைகளிலும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஞாயிறன்று இரவு - மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ‘ரீமெல்’ புயலின் தாக்கத்தால், வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்துள்ளது.
தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரு நாள்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...