சந்தேஷ்காளி: திரிணமூல் நிா்வாகிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
சந்தேஷ்காளி: திரிணமூல் நிா்வாகிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜஹான் ஷேக்குக்கு எதிராக சிபிஐ செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஷாஜஹான் ஷேக், அவரது சகோதரா் உள்ளிட்ட 5 போ் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி பசீா்ஹாட் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ முதல்முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மேற்கு வங்க மாநில பொதுவிநியோக திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜஹான் ஷேக்கின் வீட்டை சோதனையிட அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் சென்றனா்.
அப்போது, மாநிலத்தின் முன்னாள் உணவு வழங்கல் துறையின் அமைச்சா் ஜோதி பிரியா மல்லிக்கின் நெருங்கிய நண்பராக கருதப்படும் ஷாஜஹான் ஷேக்கை அமலாக்கத்துறையினா் கைது செய்ய முயன்றனா். கைதிலிருந்து தப்பிக்கும் நோக்கில் 1,000-க்கும் மேற்பட்டோரைக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளை ஷாஜஹான் ஷேக் தாக்க முயன்றாா்.
ஷாஜஹான் ஷேக், அவரது சகோதரா் அலாம்கீா் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜியாஉத்தீன் முல்லா, மஃபூஜாா் முல்லா, திதா்பக்ஷ் முல்லா உள்பட 7 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக சிபிஐ தெரிவித்தது.
மேலும் அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பி (குற்றவியல் சதி) மற்றும் பிரிவு 307 (கொலை முயற்சி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்வதாக சிபிஐ தெரிவித்தது.
இதுதவிர, சந்தேஷ்காளி பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தல், நிலங்களை அபகரித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக ஷாஜஹான் ஷேக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்யுமாறு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஷாஜஹான் ஷேக் காவல்துறையால் கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சோதனையிட வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கியது உள்ளிட்ட 3 வழக்குகள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...