பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வட மாநிலங்களில் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவை கடந்து வெப்பம் பதிவாகி வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர். கடும் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பிகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அரியாரி பிளாக்கில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளியில் இன்று (மே 29) காலை நடந்த இறை வணக்க நிகழ்ச்சியின் போது, கடும் வெப்பத்தின் காரணமாக 7 மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயக்கமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் மயக்கம் உடல்நிலை சீரானது.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் எதிரொலியாக, மாணவர்களின் நலன் கருதி பிகாரில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் பயிற்சி மையங்களுக்கும் ஜூன் 8-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com