தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நவீன் பட்நாயக் உடல்நலக் குறைவின் பின்னணியில் சதியா? பிரதமர் மோடி கேள்வி

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமானதைக் குறித்து கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

News image
Updated On :29 மே 2024, 1:52 pm

DIN

ஒடிஸாவில் பாஜக ஆட்சி அமைத்தால், முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் உறுதி பட தெரிவித்தார்.

ஒடிஸாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கு பின்னால் ஏதேனும் சதி உள்ளதா?

அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கு, தற்போது அவர் சார்பாக அரசை நடத்தி வரும் ஊழல் அரசுதான் காரணமா?"

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒடிஸாவில் பாஜக ஆட்சி அமைத்தால், பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்கும்” என்று மோடி கூறினார்.

பட்நாயக்கிற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஜேடி தலைவர் விகே பாண்டியனைப் பற்றி வெளிப்படையாக பேசும்போது, "ஒடிஸா மக்கள் ஒடியா முதலமைச்சரையே விரும்புகின்றனர்" என்றார்.

25 ஆண்டுகால பிஜேடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒடிஸா மக்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று மோடி தெரிவித்தார்.

ஒடிஸா முதல்வரின் கை அசைவுகளைக்கூட பாண்டியன் கட்டுப்படுத்துவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியிருந்த நிலையில், பட்நாயக்கின் உடல்நிலை குறித்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது நவீன் பட்நாயக் பேசும்போது அவரின் கை நடுங்குவதைப் போன்றும், அதனை வி.கே. பாண்டியன் மறைப்பதைப் போன்றும் இருக்கும் விடியோவை ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.