சிறுநீரகத்தை மாற்றி அகற்றி பெண்ணின் உயிருக்கே உலை வைத்த மருத்துவமனை

சிறுநீரகக் கல்லுக்கு பதில் சிறுநீரகத்தை அகற்றி பெண்ணின் உயிருக்கே உலை வைத்த மருத்துவமனை
அறுவைசிகிச்சை
அறுவைசிகிச்சை
Published on
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஒரு சிறுநீரகம் பழுதடைந்து, அதனை அகற்ற மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கு, நல்ல சிறுநீரகத்தை அகற்றி, அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திய மருத்துவமனை பூட்டில் சீல் வைக்கப்பட்டது.

ஏற்கனவே, இடது சிறுநீரகம் பழுதாகி, அதனை அகற்றும் அறுவைசிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 வயது பானுவுக்கு மே 15ஆம் தேதி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, தவறுதலாக வலடு பக்க சிறுநீரகம் அகற்றப்பட்டுவிட்டது.

இதையடுத்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதில், அவர் அரசு உதவிபெறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில், சிறுநீரக கற்களை அகற்றவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது சிறுநீரகத்தையே அகற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அறுவைசிகிச்சையின்போது தவறுதலாக வலது சிறுநீரகத்தையே அகற்றிவிட்டார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிறுநீரகத்தை மீண்டும் அவருக்குப் பொருத்த வேண்டும் என்றால், அவரது உடல்நிலை சீரடைந்தபிறகே சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அவரது உறவினர்களுக்குத் தெரியவில்லை. மருத்துவ அறிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து வெளிச்சத்துக்கு வந்ததும், ஜுன்ஜுனு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின்பேரில், மருத்துவமனையிலிருந்து அப்பெண்ணின் மருத்துவ அறிக்கைகள் கைப்பற்றப்பட்டு, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தான் அரசின் பல்வேறு திட்டங்களில் இணைக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையை அதிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com