பிரசாரத்தில் மோடி பேசிய வெறுப்புப் பேச்சுகள் பிளவுகளை ஏற்படுத்துபவை: மன்மோகன் சிங்

பஞ்சாப் மக்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

குறிப்பிட்ட பிரிவினரை அல்லது சமூகத்தை, எதிர்க்கட்சிகளை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது வெறுக்கத்தக்க, தரம்தாழ்ந்த பேச்சுகளை கூறியதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏழாம் கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த 10 ஆண்டுகளாக, பஞ்சாப் மக்களையும், பஞ்சாப் கலாசாரத்தையும் பிரதமர் மோடி இழிவுபடுத்தியுள்ளார்.

மேலும், இந்தியாவில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிட முயற்சிக்கும் சர்வாதிகார ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான இறுதி வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது.

தொடர்ச்சியாக, மக்களவைத் தேர்தல் பிரசாரங்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன், பிரதமர் நரேந்திர மோடி, வெறுக்கத்தக்க பேச்சுகளை தொடர்ந்து பேசி வருகிறார். நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பிளவுபடுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. ஒரு பிரதமர் பதவியில் இருந்து கொண்டு இதுபோன்ற தரம்தாழ்ந்து பேசும் முதல் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, சமூகத்தை அல்லது எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசும்போது எந்த ஒரு பிரதமரும் இந்த அளவுக்கு வெறுக்கத்தக்க வகையில் பேசியதில்லை.

என் மீதும் சில அவதூறான கருத்துகளை மோடி கூறியிருக்கிறார். எனது வாழ்க்கையில், நான் எந்த வொரு சமூகத்தையும் மற்றொரு சமூகத்துடன் ஒப்பிட்டுப் பேசியதில்லை. அது பாஜகவினர் மட்டுமே உரிமம் பெற்ற பேச்சுவழக்கு என்றும் மன்மோகன் கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com