மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'இந்தியா வெல்லும்' - ராகுல் எக்ஸ் பதிவு!

தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

News image

படம் | ஏஎன்ஐ

Updated On :30 மே 2024, 6:34 pm

தேர்தல் பிரசாரம் இன்று (மே 30) மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

விடியோவில் ராகுல் கூறியிருப்பதாவது, ”இன்று, பிரசாரத்தின் கடைசி நாளில், நாட்டின் மக்களுக்கு எனது வணக்கத்தினை செலுத்துகிறேன். காங்கிரஸ் கட்சியின் துணிச்சலான வேட்பாளர்களுக்கு நான் நம்பிக்கையுடன் ’இந்தியா அரசு உருவாகப் போகிறது’ என்று சொல்ல விரும்புகிறேன்.

கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது அக்கறை கொண்ட உண்மையான பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைவரின் குரலையும் எழுப்பினோம். சமூகத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கும், நமது செய்தியை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பரப்புவதற்கும் புரட்சிகர உத்தரவாதங்களை நாங்கள் ஒன்றாக நாட்டிற்கு வழங்கினோம்.

கடைசி நிமிடம் வரை வாக்குச்சாவடியின் மேல் ஒரு கண் வைத்திருக்குமாறு நான் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா கூட்டணி வெல்லும், என நன்றி தெரிவித்துள்ளார் ராகுல்.

தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகாநந்தர் தியானம் செய்த விவேகாநந்தர் நினைவுப் பாறைக்கு தியானம் செய்ய கன்னியாகுமரி சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.