ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பிபவ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

News image
Updated On :31 மே 2024, 12:46 pm

DIN

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், மே 13 அன்று முதல்வரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாக புகாா் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆம்ஆத்மிக்க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இதைத் தொடா்ந்து, அவரை கடந்த மே 18ஆம் தேதி தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

பிபவ் குமாரின் 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் வழக்கில் பிபவ் குமாருக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் வழங்கக் கோரிய தில்லி காவல்துறையின் மனுவை அவரது வழக்கறிஞர் எதிர்த்தார். அதேசமயம் தனது கைதைக் கண்டித்து பிபவ் குமார் தாக்குதல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.