
ஒடிஸாவில் கோவிலுக்கு சென்று திரும்பிய பஜனைக் குழுவினர் பயணித்த வேன், லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒடிஸாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கண்டகோடா, சமர்பிந்தா கிராமத்தினர் கோவிலில் பஜனை பாடிவிட்டு, வேனில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, லாரி ஒன்றின்மீது மோதியது.
இந்த விபத்தில், வேனில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலையில் இருந்த பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: 10 மாதங்களில் ரூ. 2,140 கோடி மோசடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.