ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 12 பேர் படுகாயம்!
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்கியதில் மக்கள் 12 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சவுக்கில் உள்ள ஞாயிறு சந்தை பகுதியில் உள்ள சுற்றுலா மையத்தின் மீது தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளை வீசினர்.
இதனால் அதனைச் சுற்றியிருந்த மக்களில் 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?
ஸ்ரீநகரின் கான்யார் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி ஒருவர் நேற்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் எதிரொலியாக இன்று தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இதுகுறித்து, 'ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
ஸ்ரீநகரில் பொதுமக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தியது கவலையளிக்கிறது. இதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.