மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிறந்த எம்.பி.யாக இருப்பார் பிரியங்கா காந்தி: ராகுல் பேச்சு!

வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம்...

News image

வயநாட்டில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி. - dinamani

Updated On :3 நவம்பர் 2024, 9:38 am

வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, சிறந்த எம்.பி.யாக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

மனந்தவாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,

'பிரியங்கா காந்தியை நான் சகோதரியாகப் பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம். அவரை சகோதரியாக பெறுவதில் இப்போது நீங்களும் அதிர்ஷ்டசாலிகள். அவர் உங்கள் சகோதரியைப் போல, தாயைப் போல, மகளைப் போல உங்களுடன் இருக்கப் போகிறார்.

பிரியங்கா இதுவரை தேர்தல் பிரசாரக் களத்தில் மட்டுமே இருந்து வருகிறார். என்னுடைய அப்பாவுக்காக, என்னுடைய அம்மாவுக்காக, எனக்காக பிரசாரம் செய்த்திருக்கிறார். இதுவரை தேர்தலில் நின்றதில்லை. முதல்முறையாக தேர்தலில் களமிறங்குகிறார். அவர் சிறந்த எம்.பி. என்பதை மக்களுக்கு நிரூபிப்பார்' என்றார்.

Story image

கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, 'உண்மைக்காகவும் உரிமைக்காகவும் ராகுல் காந்தி போராடி வருகிறார். பாஜக ஒவ்வொரு நாளும் ராகுலைத் தாக்கி பேசுகிறது. அவரைப் பற்றி வயநாடு மக்களுக்குத் தெரியும். வயநாடு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான வசதிகளைப் பெற அவர் போராடினார். எனினும் அங்கு வசதியை மேம்படுத்த வேண்டும்.

இப்பகுதியில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. சாலைப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ராகுல் காந்தி எனக்கு வழிகாட்டியுள்ளார். அவரின் வழியே உங்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வேன்.

Story image

மக்களுக்காகத்தான் அரசு இருக்கிறது. ஆனால், மோடி அரசு, பணக்காரர்களுக்காக செயல்படுகிறது. நல்ல சுகாதாரம், வேலைவாய்ப்பு வழங்குவதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. அவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். வெறுப்பைப் பரப்ப நினைக்கிறார்கள். நிலங்களையும் துறைமுகங்களையும் மக்களிடம் இருந்து கைப்பற்றி தொழிலதிபர்களுக்கு கொடுக்கின்றனர்' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.