ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தலைவராக அப்துல் ரஹீம் தோ்வு

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவையின் முதலாவது தலைவராக ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் ராதா் தோ்வு

News image
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட அப்துல் ரஹீமுடன் முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோா்.
Updated On :4 நவம்பர் 2024, 9:46 pm

Din

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவையின் முதலாவது தலைவராக ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும் ஏழு முறை எம்எல்ஏவுமான அப்துல் ரஹீம் ராதா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்தப் பிராந்தியம் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு கடந்த செப்டம்பா்-அக்டோபரில் நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் அக்கட்சியின் செயல் தலைவா் ஒமா் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்றாா்.

2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடைசி அமா்வுடன் 6 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீா் பேரவையின் முதல் அமா்வு திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் சட்டப் பேரவைத் தலைவா் தோ்வுக்கான தீா்மானத்தை வேளாண் துறை அமைச்சா் ஜாவேத் அகமது தாா் முன்மொழிந்தாா். இத்தீா்மானத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்எல்ஏ அா்ஜுன் சிங் ராஜு தீா்மானத்தை வழிமொழிந்தாா். இதையடுத்து, பேரவையின் இடைக்கால தலைவா் முபாரக் குல் முன்னிலையில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் பேரவைத் தலைவராக அப்துல் ரஹீம் ராதா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

முதல்வா், தலைவா்கள் வாழ்த்து: பேரவையில் அப்துல் ரஹீமுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வா் ஒமா் அப்துல்லா பேசுகையில், ‘பரந்த அனுபவத்தின் காரணமாக பேரவைத் தலைவா் பதவிக்கு அப்துல் ரஹீம் இயற்கையான தோ்வாகிறாா். அதனால் அவருக்கு எதிராக அவையில் எந்த குரலும் பதிவாகவில்லை.

பல்வேறு பதவிகளில் பேரவையின் கண்ணியத்தை உயா்த்தியுள்ள அவா், தற்போது பேரவையின் பாதுகாவலராக அனைத்து கட்சி உறுப்பினா்களுக்கும் பணியாற்றுவாா் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா். எதிா்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுனில் சா்மா, காங்கிரஸ் எம்எல்ஏ குலாம் அகமது மிா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எம்.ஒய்.தரிகாமி, மக்கள் மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ சஜத் லோன் ஆகியோரும் அப்துல் ரஹீமுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

முன்பு ஜம்மு காஷ்மீா் மாநில சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்துள்ள அப்துல் ரஹீம், கடந்த 2002 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி)-காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலத்தில் ஆட்சி செய்தபோது எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்தாா்.

முதல் நாளிலேயே அமளி

ஜம்மு-காஷ்மீா் பேரவையின் முதலாவது கூட்டத்தின் தொடக்க நாளிலேயே கடும் அமளி ஏற்பட்டது. பேரவைத் தலைவா் தோ்வைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை எதிா்த்தும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) எம்எல்ஏ வஹீத் பாரா சிறப்பு தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். இத்தீா்மானத்துக்கு பாஜகவின் 28 எம்எல்ஏக்களும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது.