/

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் உள்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு!

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவுப் பற்றி..

News image

முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி

Updated On :5 நவம்பர் 2024, 9:37 am

ஜல் ஜீவன் மிஷன் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி உள்பட 22 பேர் மீது ராஜஸ்தானின் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக உயர் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.

ஜல் ஜீவன் மிஷனில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநர் ஜென்ரல் ரவி பிரகாஷ் மெஹரா தெரிவித்தார்.

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்பட 22 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜோஷி முந்தைய காங்கிரஸில் பொதுச் சுகாதார பொறியியல் துறையின் அமைச்சரவை அமைச்சராக இருந்தார்.

இந்தத் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களை வழங்குவதில் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறையும் ராஜஸ்தானில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஜோஷியின் வீடு உள்பட பல சோதனைகளை மேற்கொண்டது. மேலும் இது தொடர்பாக சில ஒப்பந்தக்காரர்களையும் கைது செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.