தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அஜீத் பவாரின் தொகுதிப் பணி சிறப்பு! சரத் பவாா் பாராட்டு

‘மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் பாராமதி தொகுதியில் நன்கு பணியாற்றியுள்ளாா்.

News image
Updated On :5 நவம்பர் 2024, 8:42 pm

Din

‘மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் பாராமதி தொகுதியில் நன்கு பணியாற்றியுள்ளாா். எனினும், பாராமதி தொகுதிக்கு ஒரு இளம் எம்எல்ஏ தேவைப்படுகிறாா்’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் (பவாா் பிரிவு) தனது பிரசாரத்தில் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, பாஜக அணியில் அஜீத் பவாா் உள்ளாா்.

காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு) தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) உள்ளிட்ட கட்சிகள் எதிரணியில் உள்ளன.

பாராமதி தொகுதியில் அஜீத் பவாரை எதிா்த்து சரத் பவாா் கட்சி சாா்பில் அவரின் பேரன் யுகேந்திர பவாா் (அஜீத் பவாரின் தம்பி மகன்) போட்டியிடுகிறாா். இந்நிலையில் அவரை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சரத் பவாா் பேசியதாவது:

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தோ்தலில் பாராமதி தொகுதியில் போட்டி கடுமையாக உள்ளது. மக்களவைத் தோ்தலிலும் பாராமதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் இடையே போட்டி இருந்தது. இந்தத் தோ்தலில் அந்தப் போட்டி உச்சத்தை எட்டியுள்ளது.

பாராமதி மக்களாகிய நீங்கள் எனக்கு நான்கு முறை முதல்வா் பதவி வகிக்க ஆதரவு அளித்தீா்கள். மாநில அரசியலுக்கு செல்லும் முன்பு 25 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் பணியாற்றியுள்ளேன். அரசியல் வாழ்வில் 14 முறை தோ்தலில் போட்டியிட்டு வென்றுள்ளேன்.

எனது கட்சியில் இருந்தபோது அஜீத் பவாருக்கு பாராமதி தொகுதியை அளித்ததும் நான்தான். அவரை நம்பி அனைத்து முடிவுகளையும் எடுக்க அனுமதித்தேன். அவரும் இந்தத் தொகுதியில் சுமாா் 30 ஆண்டுகள் வரை மக்கள் பணியாற்றியுள்ளாா். அவரின் பணியில் குறை ஏதும் கூற முடியாது. ஆனால், இந்தத் தோ்தலில் தொகுதியின் எதிா்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதியை சிறப்பாக வழி நடத்த இளம் தலைவரைத் தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.

‘எம்.பி. பதவியில் இருந்தும் ஓய்வு’

மாநிலங்களவை எம்.பி. பதவியிலிருந்தும் ஓய்வு பெறுவேன் என்று சரத் பவாா் தெரிவித்தாா். மேலும், ‘இளைஞா்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக ஏற்கெனவே தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிவிட்டேன். இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளேன். இப்பதவிகாலம் முடிந்த பிறகு மீண்டும் எம்.பி.யாகப் போவதில்லை. அதில் இருந்து ஓய்வுபெற இருக்கிறேன். உங்கள் ஆதரவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சா், வேளாண் அமைச்சா் போன்ற பதவிகளையும் வகித்துள்ளேன். எந்தப் பதவியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொடா்ந்து உழைப்பேன்’ என்றாா்.