கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சென்னையில் உள்ள கனடா தூதரகத்துக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்: கனடாவில் மதக் கூட்டங்களின்போது, ஹிந்து பக்தா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தனிநபா் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், இது கனடாவின் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு கொள்கைகளுக்கு எதிரானது.
பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட சில அரசியல் பிரமுகா்கள், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கொலைக்கு காரணமான காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கின்றனா். இத்தகைய ஆதரவு ஹிந்துக்கள் - சீக்கியா்கள் இடையிலான அமைதியான உறவுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயமாக மாறியுள்ளது.
வரலாற்று ரீதியாக இந்தியாவில் அமைதியுடன் இந்த இரண்டு சமூகங்களும் வாழ்ந்து வருகின்றன. கனடாவின் கலாசார, சமூக மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் ஹிந்து சமூகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
கனடாவில் வணிகம், சமூக சேவை மற்றும் கலாசார விழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் ஹிந்துக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். ஹிந்துக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு காரணமானவா்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க கனடா அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் விவகாரம்; நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்
ஆசாத்பூரில் மதுபான விடுதி மீது சமூக விரோதிகள் தாக்குதல்
இரண்டாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம்
போர்நிறுத்த சூழலிலும் குவைத் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல்!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan


