இந்தியா - கனடா இடையேயான பிரச்னை தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சசி தரூர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், நிலைக்குழு உறுப்பினர்களுக்கு வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்து வருகிறார்.
இந்தியா - கனடா இடையே காலிஸ்தான் விவகாரத்தில் பிரச்னைகள் நீடித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
தீபாவளியையொட்டி கோயிலுக்கு வருகை தந்திருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கனடாவில் உள்ள ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
வெளியுறவு அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சசி தரூர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தி தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என்று நினைக்கிறேன். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விவகாரம், வெளியுறவுச் செயலரிடம் விளக்கம் பெறவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.