சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!

3வது வணிக நாளான இன்று (நவ. 6) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

3வது வணிக நாளான இன்று (நவ. 6) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரையிலும் நிஃப்டி 200 புள்ளிகள் வரையிலும் உயர்ந்தது.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், உலகளாவிய சந்தை குறிப்புகள் நேர்மறையாக உள்ளதால், இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் 47வது அதிபரை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று (நவ. 5) மாலை 5.30 மணிமுதல் இன்று அதிகாலை வரை நடைபெற்றது. வாக்குப்பதிவையொட்டி இந்திய பங்குச் சந்தை நேற்று நேர்மறையாக முடிந்திருந்தது.

ஏற்றத்துடன் தொடக்கம்

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 313.25 புள்ளிகள் உயர்ந்து 79,762.39 புள்ளிகளாக வணிக நடைபெற்று வருகிறது. இது மொத்த வணிகத்துடன் ஒப்பிடும்போது 0.36% உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86.95 புள்ளிகள் உயர்ந்து 24,304.60 புள்ளிகளுடன் வணிகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வணிகத்துடன் ஒப்பிடும்போது 0.39% உயர்வாகும்.

11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 18 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்திருந்தன. அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.06% உயர்ந்திருந்தன.

இதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் 2.88%, எச்.சி.எல். டெக் 2.68%, டெக் மஹிந்திரா 2.58%, அதானி போர்ட்ஸ் 1.92%, மாருதி சுசூகி 1.38%, சன் பார்மா 1.36% உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று 12 நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன. டைட்டன் கம்பெனி, இந்தஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ், கோட்டாக் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

நிஃப்டி பட்டியலில் சிசிஎல் புராடக்ட்ஸ், டிக்சான் டெக், கிர்லோஸ்கர் ஆயில், கெயில், ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

ஆசிய பங்குச் சந்தை நிலவரம்

ஆசியாவில் இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி ஜப்பான் பங்குச் சந்தையும் 2 சதவீதம் வரை உயர்ந்திருந்தனது. அமெரிக்க அதிபர் தேர்தல் இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதேபோன்று தைவான் பங்குச் சந்தையும் 1.21 சதவீதம் உயர்ந்திருந்தது.

தென்கொரிய பங்குச் சந்தை எந்தவித மாற்றமுமின்றியும், ஹாங் காங் பங்குச் சந்தை 3 சதவீதம் வரை சரிவுடனும் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.