உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தாய், மகள் திட்டமிட்டு எரித்துக் கொலை: ஒடிசாவில் அதிர்ச்சி!

சொந்த தாய், சகோதரியைக் எரித்துக் கொன்ற மகன்..

எரித்துக் கொலை

Published On :

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் தாய், மகளை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சல்பல்பூர் பகுதியில் ஹடபாடா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. அவர்கள் வசித்துவந்த வீட்டின் முதல் தளத்தில் சினேகலதா தீட்சித் (90) அவரது மகள் சைரேந்திர தீக்ஷித் (62) ஆகியோரின் உடல்கள் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த சடலங்களை போலீஸார் கண்டெடுத்தனர்.

சினேகலதா தீட்சித்தின் இளைய மகள் இந்திராணி புரோகித், நிலம் மற்றும் சொத்து தகராறில் இருவரையும் அவரது சகோதரர் கொன்றதாகக் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக சம்பல்பூர் சதார் காவல் அதிகாரி கூறுகையில்,

ஆரம்பத்தில் இது இயற்கைக்கு மாறான மரணமாகக் கருதப்பட்டது. பின்னர் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை விசாரித்ததில் இது கொலை வழக்கு என்று கண்டறியப்பட்டது.

விசாரணையில் சினேகலதா தீட்சித்தின் மகன் ஜெகன்நாத் மற்றும் பேரன் சங்கேத் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதில்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையை மேலும் தீவிரமாகிய நிலையில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தாய், சகோதரியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் அவர்களது உடல்களை தீ வைத்து எரித்ததாக ஜெகன்நாத் தெரிவித்தார். அவருக்கு சங்கேத் உதவியுள்ளார.

சொத்து தகராறில் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், சினேகலதா தீட்சித்தின் மகன், பேரன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸார விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என போலீஸார் கூறியுள்ளனர்.

சொத்து தகராறு காரணமாக சொந்த தாய், சகோதரியைக் கழுத்து நெரித்துக் கொன்று, தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.