தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடக்கம்!
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி இன்று(நவ. 9) தொடங்கவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்.


தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி இன்று(நவ. 9) தொடங்கவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத் தேர்தலின்போதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையாகவும் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்தது. மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
அந்தவகையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது.
இது நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் சில நகரங்களில் பொதுமுடக்கம்! ஏன் தெரியுமா?
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை இன்று தொடங்குகிறது. 80,000 கணக்கெடுப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, 33 மாவட்டங்களில் உள்ள 1.17 கோடி குடும்பங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்வார்கள்.
1931-க்குப் பிறகு தெலங்கானாவில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இது ஒரு வரலாற்று, புரட்சிகரமான தருணம். இது தெலங்கானாவில் பல்வேறு இயக்கங்களின் கனவுகளில் ஒன்று. மேலும் டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பு லட்சியங்களில் ஒன்றாகும்.
இந்த வார தொடக்கத்தில் ராகுல் காந்தி ஹைதராபாத் வந்திருந்து சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை பார்வையிட்டார்.
இந்தியாவில் தலைவர்களின் கொள்கைப்படி இந்திய அரசியலைமைப்பின்படியும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நீதிக்கான சிந்தனையை நாங்கள் ஊக்குவிக்க கடமைப்பட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...