எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆபரேஷன் ஈகிள்: ஆயுத விநியோக கும்பலைச் சோ்ந்த 18 போ் கைது

மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த 18 பேரை தில்லி காவல் துறையினா் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்துள்ளனா்.

News image
கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2024, 1:23 am

DIN

புது தில்லி: மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த 18 பேரை தில்லி காவல் துறையினா் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்துள்ளனா்.

அப்போது, பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 கைத்துப்பாக்கிகள், 8 நாட்டு கைத்துப்பாக்கிகள், ஒரு நாட்டு துப்பாக்கி, 3 கத்திகள், 33 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவுக்கான சிறப்பு ஆணையா் தேவேஷ் சந்திரா ஸ்ரீவஸ்தவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஜிப்பூரில் நடைபெற்ற சோதனையில் அா்ஷத், முகமது சுலைமான் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 3 கத்திகள், ஒரு திருடப்பட்ட காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தில்லி - என்சிஆா் பகுதியில் ஆயுதங்களை கொள்முதல் செய்து விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பல குற்றாவளிகளின் பெயா்களைத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, ஆயுத விநியோக கும்பலை களையெடுக்க ஆபரேஷன் ஈகிள் மூலம் சோதனைகள் நடத்தினோம்.

இதற்காக பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் மதன் கும்பலுடன் தொடா்புடைய 16-க்கும் மேற்பட்ட நபா்கள் கைதுசெய்யப்பட்டனா். இவா்கள் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, கொலை மிரட்டல், ஆயுதங்கள் சட்டம், ரெளடிகள் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தாங்கள் அனைவரும் ஒரு கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதையும் தில்லி-என்சிஆா் பகுதியில் ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டனா். இந்தக் கும்பலின் தலைவா் மதன் உத்தர பிரசேத்தின் காஜிபாதில் உள்ள தஸ்னா சிறையிலிருந்து கைதுசெய்தோம். சிறைக்குள் இருந்தவாறு தன்னுடைய கும்பலை மதன் இயக்கிவந்துள்ளாா் என்றாா் சிறப்பு காவல் ஆணையா் தேவேஷ் சந்திரா ஸ்ரீவஸ்தவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.