அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்din

கேரேஜில் புல்டோசர்! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அகிலேஷ் வரவேற்பு!

புல்டோசர் நீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அகிலேஷ் வரவேற்றது பற்றி...
Published on

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வெளியிட்டது.

சட்டத்தை செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள், தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது, அதிகாரிகளே, நீதிபதிகளாக மாறி, குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி, அவர்களது வீடுகளை இடித்துத்தள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

“பாஜக அரசின் அடையாளமான புல்டோசருக்கு எதிராக உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிரான உத்தரவை வெளியிட்ட உச்சநீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீடுகளை இடிப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? இன்று யாருடைய வீடுகளையும் இடிக்காமல், கேரேஜில் புல்டோசர்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக இதைவிட பெரிய கருத்து வேறென்ன இருக்க முடியும்? எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒருநாள் எங்களின் எம்எல்ஏக்களும் வெளியே வருவார்கள். முன்புபோல் நம்முடன் இணைந்து பணியாற்றுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com