3-வது முறையாக பிரதமர் காலில் விழுந்த பிகார் முதல்வர்?
கால்களைத் தொட முயன்ற பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் தடுத்து நிறுத்தினார்.


பிகாரில் அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்க முயன்ற முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் தடுத்தி நிறுத்தினார்.
பிகாரின் தர்பங்காவில் புதன்கிழமை, (நவ. 13) முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்த விழாவில், அடிக்கல் நாட்டியதுடன், சுமார் ரூ. 12,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், விழாவில் உரையாற்றிய முதல்வர் நிதிஷ் குமார், பிரதமரை வணங்கிக் கொண்டே அவரது கால்களையும் தொட்டுக் கும்பிட முற்பட்டார். இருப்பினும், காலைத் தொட முற்பட்ட நிதிஷ் குமாரை பிரதமர் மோடி தடுத்தி நிறுத்தினார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
பிகார் முதல்வர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல.
கடந்த ஜூன் மாதத்தில் தேசிய ஜனதா கூட்டணியினர் பங்கேற்றிருந்த மக்களவைக் கூட்டத்தில், பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்க முயன்றபோதும், அவரை பிரதமர் மோடி தடுத்தார். இந்த செயல் பிகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக, ஜன் சுராஜ் கட்சித் தலைவர் விமர்சித்திருந்தார்.
இதேபோல், ஏப்ரல் மாதத்தில் பிகாரின் நவாடாவில் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமரின் கால்களை முதல்வர் நிதிஷ் குமார் தொட்டு வணங்கினார்.
அதுமட்டுமின்றி, ஜூலை மாதத்தில் விரைவுச் சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ் குமார், சாலை விரிவாக்கப் பணியை விரைவில் முடிக்குமாறு கோரினார். இதனைத் தொடர்ந்து, தனியார் ஒப்பந்த அதிகாரியின் கால்களில் விழுவதுபோலவும் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...