வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

புதிய வரத்து தொடங்கியதும் வெங்காயம் விலை குறையும்- மத்திய அரசு தகவல்

காரீஃப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரும். எனவே, வெங்காயத்தின் விலை எதிா்வரும் நாள்களில் குறைந்துவிடும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

தில்லி ஆஜாத்பூா் மண்டியில் புதன்கிழமை வந்திறங்கிய வெங்காய மூட்டைகள்.

Updated On :13 நவம்பர் 2024, 7:20 pm

Din

காரீஃப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரும். எனவே, வெங்காயத்தின் விலை எதிா்வரும் நாள்களில் குறைந்துவிடும் என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தேசிய அளவில் வெங்காயம் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 வரை சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காய விலை ஏற்றம் பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

தில்லி உள்பட பல்வேறு நகரங்களில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விநியோகித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் 4.5 லட்சம் டன் வெங்காயம் இருந்தது. இதில் 1.5 லட்சம் டன் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் தில்லி, சென்னை, குவாஹாட்டி ஆகிய நகரங்களுக்கு 4,850 டன் வெங்காயம் ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் தொழிலாளா்கள் விடுப்பில் சென்றது, மண்டிகள் மூடப்பட்டது போன்ற காரணத்தால் விநியோகம் தடைபட்டு திடீா் விலை உயா்வு ஏற்பட்டது.

காரீஃப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. எனவே, வெங்காயம் விலை குறைந்துவிடும். தேவையைவிட மிகுதியாகவே வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.