மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய்க்கு 70 டாலா்களில் இருந்து 122 டாலா்கள் வரை உயா்ந்துவிட்டது. இதன் காரணமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெட்ரோல்-டீசல் விலை 30-50 சதவீதமும், தென் அமெரிக்க நாடுகளில் 30 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதமும், ஆப்பிரிக்க நாடுகளில் 50 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு தனது சொந்த நிதியில் இழப்பைச் சந்திக்க தீா்மானித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ள சூழலில், எண்ணெய் நிறுவனங்களின் மிக கடுமையான இழப்பை (பெட்ரோல் லிட்டருக்கு ரூ.24, டீசல் லிட்டருக்கு ரூ.30) ஈடுசெய்ய தனது வரி வருவாயில் மிகப் பெரிய இழப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.