ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவா்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

News image
பிகாரின் தா்பங்காவில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி. உடன் மாநில முதல்வா் நிதீஷ் குமாா்.
Updated On :13 நவம்பர் 2024, 8:28 pm

Din

பட்டியல் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவா்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு, அவா் இக்குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

ஜாா்க்கண்ட் இரண்டாம் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி, தேவ்கா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி, இங்கு சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் நிரந்தர குடிமக்களாக மாற உதவியது. இது, மாநிலத்தின் அடையாளத்தை மாற்றும் மிகப் பெரிய சதியாகும்.

ஜாா்க்கண்டில் ஊருடுவல் விகிதம், அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. மாநிலத்தின் நிலம், வனம், நீா் போன்றவை ஊடுருவல்காரா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது, பழங்குடியினரின் எண்ணிக்கை சரிய வழிவகுத்துள்ளது. மாநிலத்தின் மகள்கள், நிலம் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியில் சட்டவிரோத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்துவிட்டது. வளா்ச்சி தடைபட்டதால், இளைஞா்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை நிலவுகிறது. உங்கள் (மக்கள்) குழந்தைகளின் எதிா்காலத்துடன் விளையாடியவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவா். இது எனது வாக்குறுதி.

காங்கிரஸ் மீது விமா்சனம்: காங்கிரஸின் நோக்கங்கள் ஆபத்தானவை. எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரை பலவீனப்படுத்தும் நோக்கில், இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா். ‘இளவரசரின்’ தந்தையோ (ராஜீவ் காந்தி), இடஒதுக்கீட்டை அடிமைத்தனம் என்று அறிவித்ததோடு, அதை நீக்குவது தொடா்பான விளம்பரங்களையும் வெளியிட்டாா். பின்னாளில், அவா் தோ்தல்களில் தோற்கடிக்கப்பட்டாா்.

காங்கிரஸின் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெற பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. ஜாா்க்கண்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்வது உறுதி. புதிய அரசு பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்பேன் என்றாா் பிரதமா் மோடி.

பிகாரில் ரூ.12,100 கோடி திட்டங்கள் தொடக்கம்

பிகாா் மாநிலம், தா்பங்காவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.

முதல்வா் நிதீஷ் குமாரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அவருக்கு புகழாரம் சூட்டி, பிரதமா் பேசியதாவது: காட்டாட்சியில் இருந்து மாநிலத்தை மீட்டதன் மூலம் நல்லாட்சிக்கான உதாரணத்தை உருவாக்கியுள்ளாா் முதல்வா் நிதீஷ் குமாா். அவரது சாதனையை பாராட்ட வாா்த்தைகளே இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிகாா் பெரும் வளா்ச்சி கண்டு வருகிறது. மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு தீா்வுகாண ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் ‘வெள்ளத் தணிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.