மருத்துவமனைக்குள் புகுந்து கத்திக் குத்து! மூவர் பலி!

தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த நிகாம் சாங்பியா என்பவர் (45) மாவட்ட மருத்துவமனையில் இருந்த தனது மனைவி, மகளை சந்திக்க வியாழக்கிழமை (நவ. 14) சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கிருந்தவர்கள் மீது நிகாம் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அவரது மனைவி, மகள் மற்றும் மற்றொரு பெண்ணை கத்தியால் குத்தியதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், தாக்குதலைத் தடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரி உள்பட மருத்துவமனை காவலரையும் தாக்கியுள்ளார். அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரால் நிகாம் கைது செய்யப்பட்டார். மேலும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com