எட்டாம் வகுப்பில் ஃபெயில்... அறுவை சிகிச்சை நிபுணராக வலம்வந்த போலி மருத்துவர்!

போலி அறுவை சிகிச்சை மருத்துவர் பிடிபட்டது பற்றி...
கைது செய்யப்பட்ட உத்பால் பாலா.
கைது செய்யப்பட்ட உத்பால் பாலா.Express
Published on
Updated on
1 min read

எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்தவர் போலி அறுவை சிகிச்சை நிபுணராக வலம்வந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிஸா மாநிலம் பெர்ஹம்பூர் மாவட்டத்தில் கிருஷ்ணா மூல(பைல்ஸ்) மருத்துவமனையை நடத்தி வருபவர் உத்பால் பாலா. இவரிடம் மூல நோய்க்காக சமீபத்தில் சிகிச்சைப் பெற்ற ஜாஷ்யா என்பவர் ரூ. 12,000 கட்டணமாக கொடுத்துள்ளார்.

ஆனால், நோய் சரியாகாததால், தான் கொடுத்த தொகையை திரும்பக் கேட்டு உத்பால் பாலாவை நாடியுள்ளார். அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாஷ்யா, காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, உத்பாலின் மருத்துவமனையில் வியாழக்கிழமை திடீர் சோதனையில் காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டனர்.

இதில், உத்பால் பாலா போலி மருத்துவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவர் வைத்திருந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்பால் பாலாவின் பின்னணி

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தின்னா நேதாஜிபள்ளியை சேர்ந்த உத்பால் பாலா, எட்டாம் வகுப்பில் தோல்வி அடைந்துள்ளார்.

அதன்பிறகு, பள்ளிப் படிப்பை தொடராத உத்பால், விசாகப்பட்டினத்தில் 2016 முதல் 2019 வரை ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து, பெர்ஹம்பூருக்கு வந்தவர், மித்ரா வீதியில் வாடகை வீடு எடுத்து தங்கி கிளினிக் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

மூலம், பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து வந்த உத்பால், தனது பெயர்ப் பலகையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளநிலைப் பட்டத்தை குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மூல நோய் தொடர்பான அறுவை சிகிச்சைகளும் சில நோயாளிகளுக்கு உத்பால் செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண விவேக் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com