கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தீவைக்கும் முன் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட மணிப்பூர் பெண்: உடல் கூறாய்வு அறிக்கை

தீவைக்கும் முன் மணிப்பூர் பெண் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாக உடல் கூறாய்வு அறிக்கை தகவல்

News image

கோப்புப் படம்

Updated On :15 நவம்பர் 2024, 7:10 am

மணிப்பூரில், கடந்த வாரம், மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிருடன் தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு, கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக உடல் கூறாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் நவம்பர் 7ஆம் தேதி நுழைந்து சமூக விரோதிகள் சிலர், ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, துன்புறுத்தி, உடலில் தீ வைத்து எரித்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில் தீக்கிரையான பெண்ணின் உடல், அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரியில் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானதால், பாலியல் வன்கொடுமை குறித்து உறுதி செய்ய இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது. மணிப்பூர் பெண்ணின் உடல் 99 சதவீதம் எரிந்துவிட்டிருந்ததாகவும், அவரது எலும்புகள் கூட கரிக்கட்டையாகியிருந்ததாக உடல்கூறாய்வு தெரிவிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் இருந்துள்ளதும், முகத்தின் அமைப்பே சிதைந்து, கை மூட்டுகள் சிதைந்துபோயிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த உடல் கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள், கொல்லப்படுவதற்கு முன்பு, அப்பெண் அனுபவித்த கொடூரமான துன்புறுத்தல்களையும் வலியையும் உணர்த்துவதாக உள்ளது.

இதுவரை கொலையாளிகள் அடையாளம் காணப்படவில்லை. சம்பவத்தின்போது, கணவரும், அவரது பிள்ளைகளும் எங்கிருந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையின் உச்சக்கட்டமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும் ஏராளமான பெண்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் கேட்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.