அம்பேத்கரை எப்போதும் காங்கிரஸ் அவமதித்து வருவதாக மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான மகாயுதியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மும்பையின் தாதர் நகருக்கு ஞாயிற்றுகிழமை வருகை தந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கரின் இலட்சியங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உழைத்து வருகிறார். இதனால்தான் எதிர்க்கட்சிகள் பயந்து அரசியல் சாசனத்தை பொதுவெளியில் பேசுகின்றன.
1989 க்கு முன், அம்பேத்கரின் படம் நாடாளுமன் கட்டடத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்படவில்லை. அதே சமயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உருவப்படங்கள் சுவர்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.