வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசு! விண்வெளியிலிருந்தும் தெரிகிறதாம்!!

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசுவை, விண்வெளியிலிருந்தும் பார்க்க முடிகிறதாம்.
காற்று மாசு
காற்று மாசு
Published on
Updated on
1 min read

காற்று மாசு எனும் மிகப்பெரிய பேரிடரால், தலைநகர் தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் நிலையில், விண்வெளியிலிருந்தும், இந்த காற்று மாசு தெரிகிறது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

தலைநகர் உள்பட வட இந்தியாவின் ஒரு பெரிய பகுதி முழுவதும் கடுமையான காற்று மாசுபாட்டால் சூழப்பட்டுள்ளது, ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த அபாயகரமான காற்று மாசுபாட்டுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்று மாசுபாட்டுடன் புகைமூட்டம் பார்க்கும் திறனை வெகுவாகக் குறைத்து, மாசுபட்டக் காற்றை சுவாசிப்பதால் உடல்நிலை மோசமடைந்து, மக்கள் சுவாசிக்கக் கூட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

தலைநகர் தில்லி, குருகிராம், நொய்டா மற்றும் காசியாபாத் போன்ற முக்கிய நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) அளவுகள் "கடுமையான" பிரிவில் இருக்கின்றன. இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பான வரம்புகளை விட மிக மிக அதிகம்.

கடந்த மாதம்
கடந்த மாதம்

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்று மாசுவினை, வெறும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து மட்டுமல்ல, விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரிகிறது என்பதுதான் சோகம். கடந்த மாதம் இதே காலத்தை விட, இந்த மாதம், வட இந்தியா எந்த அளவுக்கு காற்று மாசினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. வட இந்தியாவை ஒரு சாம்பல் நிற புகை மண்டலம் சூழ்ந்திருப்பது விண்வெளியிலிருந்து தெரிகிறது என்று ரெட்டிட் தனது வரைபடத்துடன் வெளியிட்டிருக்கிறது.

இந்த வரைபடத்தைப் பார்த்து வெளி மாநில மக்களை விடவும், தில்லி மக்கள் அதிகக் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இந்த காற்று மாசு எனப்படும் பேரிடர் மெல்ல எங்களது உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கிறது என்றும், மிகக் கடினமான நேரம் இது, பலருக்கும் இப்போதே நுரையீரல் பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன என்று ஒருவரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.