புது தில்லியைச் சேர்ந்த நபர், தனக்குப் பிறக்த இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொன்று புதைத்த சம்பவத்தில் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகளின் தந்தை நீரஜ், அவரது பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.
இதையும் படிக்க.. மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?
குழந்தைகளின் தாய் பூஜாவுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது, பூஜாவின் கணவர் நீரஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தைகளை மட்டும் தாங்கள் வாங்கிக்கொண்டு, பூஜாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
குழந்தைகளை, திட்டமிட்டு உணவு கொடுக்காமல் கொன்று, நீரஜ் மற்றும் குடும்பத்தினர், பூஜாவுக்குத் தெரிவிக்காமலேயே புதைத்துவிட்டனர்.
பிறகு, பூஜாவுக்குக் குழந்தைகள் இறந்துவிட்ட தகவல் கிடைத்ததும் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தவர்கள், கருவுற்றிருக்கும்போது, குழந்தைகளின் பலினத்தை அறியும் சோதனைக்கு உள்படுத்தவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால், தான் ஒப்புக் கொள்ளாததால், பிறந்த குழந்தைகளைக் கொன்றிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.