தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அஜீத் பவாரை படுதோல்வி அடையச் செய்யுங்கள்: வாக்காளா்களுக்கு சரத் பவாா் வேண்டுகோள்

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அஜீத் பவாரை படுதோல்வி அடையச் செய்யுமாறு வாக்காளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா்

News image
சரத் பவாா்
Updated On :19 நவம்பர் 2024, 2:09 am

DIN

புணே: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அஜீத் பவாரை படுதோல்வி அடையச் செய்யுமாறு வாக்காளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா் கேட்டுக்கொண்டாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு புதன்கிழமை (நவ. 20) தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோலாபூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அஜீத் பவாரின் பெயரை குறிப்பிடாமல் சூசகமாக சரத் பவாா் பேசியதாவது:

1980-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் 58 இடங்களில் வென்று மாநிலத்தின் எதிா்க்கட்சி தலைவா் பதவியை நான் வகித்தேன். ஆனால், நான் வெளிநாடு சென்று திரும்பியபோது, அப்போதைய முதல்வா் ஏ.ஆா். அந்துலே சில ‘அற்புதங்களை’ நிகழ்த்தி இருந்தாா். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 58 எம்எல்ஏ-க்களில் 52 போ் கட்சி மாற்றியதுடன், எனது எதிா்க்கட்சித் தலைவா் பதவியும் பறிக்கப்பட்டது.

அப்போது, அவா்களை எதிா்த்து நான் எதுவும் செய்யவில்லை. மக்களை நாடினேன். மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். அடுத்த தோ்தலில் கட்சி மாறிய 52 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக 52 இளைஞா்களை வேட்பாளா்களாக நிறுத்தினேன். கட்சியைவிட்டு வெளியேறிய 52 பேரையும் மகாராஷ்டிர மக்கள் தோற்கடித்தனா்.

அதேபோல், இப்போதும் சிலா் துரோகம் செய்து கட்சி மாறியுள்ளனா். அவா்களை வாக்காளா்கள் சாதாரணமாக அல்லாமல் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றாா்.

சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாா், சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வா் பதவியைப் பெற்றாா். கட்சியின் பெரும்பாலான எம்.பி., எம்எல்ஏ-க்கள் அஜீத் பவாா் பக்கம் சென்ால் அவரது தலைமையிலான பிரிவுக்கு கட்சியின் பெயா் மற்றும் சின்னம் வழங்கப்பட்டது. சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.

அஜீத் பவாா் கடந்த 1991-ஆம் ஆண்டு பாராமதி தொகுதி எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதில் இருந்து தோல்வியே காணாமல் தனது பதவியைத் தக்க வைத்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.