

சரத் பவாருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸை ஒன்றிணைக்க அஜீத் பவார் விரும்பியதாகக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், புதன்கிழமையில் (ஜன. 28) விமான விபத்தில் சிக்கி பலியானார். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமையில் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.
இரங்கல் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சமாஜவாதி) அங்குஷ் ககாடே பேசுகையில், "எனக்கும் சரத் பவாருக்கும் நல்ல பிணைப்பு இருப்பதால், தேசியவாத காங்கிரஸை மீண்டும் ஒன்றிணைக்க என்னை அஜீத் பவார் பேசச் சொன்னார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயந்த் பாட்டீல், "இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைப்பதே அஜீத் பவாரின் நோக்கமாக இருந்தது. இதுதொடர்பாக, நாங்கள் பல கூட்டங்களை நடத்தினோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.