மத்திய பட்ஜெட் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்!

மத்திய பட்ஜெட் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகின்றன.
file photo
மத்திய பட்ஜெட்ANI
Updated on
2 min read

வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பிப்.1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளாா்.

மத்திய பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

அதாவது, நாட்டின் முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் வில்சனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மத்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக மொரார்ஜி தேசாய் விளங்குகிறார். முழு நேர நிதியமைச்சராக இருந்த முதல் பெண் என்ற பெருமையையும், நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தவர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

வரலாற்று நிகழ்வுகளோடு பல பட்ஜெட்களும் தொடர்பு கொண்டுள்ளன. 1973ஆம் ஆண்டு பொருளாதார அழுத்தம் காரணமாக கருப்பு பட்ஜெட் எனவும், 1997ஆம் ஆண்டு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் கனவு பட்ஜெட் எனவும் அழைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள், நேரம் போன்றவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலில் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள், மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

1999-ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், மாலையில் தாக்கல் செய்யும் பட்ஜெட் முறையை மாற்றி காலை11 மணிக்கு தாக்கல் செய்வதை அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் கடைசி நாள் என்பதை பிப்ரவரி முதல் நாள் என 2017ஆம் ஆண்டு அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி மாற்றினார்.

ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒருங்கிணைக்கப்பட்டு மத்திய பட்ஜெட்டிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சூட்கேஸில் பட்ஜெட் உரையைக் கொண்டு வருவதை மாற்றி, துணியால் ஆன உரையில் கொண்டு வரும் நடைமுறையை செய்தார்.

1950ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலாவதற்கு முன்பே, வெளியே கசிந்துள்ளது. இதன் காரணமாகவே ரகசியமாக மிகப் பாதுகாப்பாக பட்ஜெட் தயாரிக்கும் முறை உருவானது.

1970ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, நிதியமைச்சகத்தை வைத்திருந்ததால், முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இது பெண் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் ஆனது.

ஜவகர்லால் நேரு (1958), இந்திரா காந்தி (1970), ராஜீவ் காந்தி (1987) ஆகியோர் பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்களாவர்.

விறுவிறுப்படையும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள்!

கடமை மாளிகையின் நவீன மத்திய செயலக அலுவலகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே மத்திய நிதித் துறையைச் சோ்ந்த பெரும்பாலானோா் பணியாற்றத் தொடங்கினாலும், அங்கு அச்சு இயந்திரம் இல்லை. அச்சு இயந்திரம் உள்ள பழைய அலுவலக வளாகத்தில் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன.

பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள், அந்தப் பணிகள் நிறைவடையும் வரை, வெளியுலக தொடா்பு எதுவும் இல்லாமல் அச்சு இயந்திரம் உள்ள கட்டடத்திலேயே தங்கியிருப்பா். பட்ஜெட் ஆவணங்கள் குறித்து ரகசியம் காக்க அவா்கள் வெளியில் செல்லாமல், அந்தக் கட்டடத்திலேயே இருப்பா். மக்களவையில் பட்ஜெட் உரையை நிதியமைச்சா் நிறைவு செய்த பிறகு, அந்தக் கட்டடத்தில் இருந்து அவா்கள் வெளியேறுவது வழக்கம்.

Summary

Many interesting information is being released about the Union Budget.

இதையும் படிக்க..

file photo
பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

மேலும் படிக்க..

file photo
பட்ஜெட் எதிர்பார்ப்பு! காப்பீடு, வீட்டுக் கடன்களுக்கு புதிய வரி விதிப்பு முறையில் சலுகை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com