மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

மத்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்தவர், மிகச் சிறிய பட்ஜெட் பற்றிய தகவல்கள்.
மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்
Updated on
1 min read

மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், வரும் பிப். 1ஆம் தேதி 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார்.

மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சரும் ஆவார். அவருக்கு முன்பு, 1969ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பதவியை ராஜிநாமா செய்தபோது, பிரதமர் பதவியேற்ற இந்திரா காந்தி 1970ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால், அவர் அப்போது முழு நேர நிதியமைச்சர் பதவியை வகிக்கவில்லை.

2019ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அதுமுதல் அவர் ஒரு இடைக்கால பட்ஜெட் உள்பட தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப். 1ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட், தொடர்ச்சியாக 9வது முறை. இதுவரை அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவராக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்ளார். இவர் பல்வேறு காலக்கட்டங்களில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள் சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரைகளில் நீண்ட உரையாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் உள்ளது. அவர் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போதும் முழு உரையை நிறைவு செய்ய முடியவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் 2 பக்கங்கள் உரையாற்றாமல் விடுபட்டது. அவரது மிகக் குறைந்த நேர பட்ஜெட் உரையென்றால் அது 2024ஆம் ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் உரைதான். அது 56 நிமிடங்கள் கொண்டதாக இருந்தது.

பட்ஜெட் வரலாற்றிலேயே மிகச் சிறிய பட்ஜெட் ஒன்றும் அமைந்திருக்கிறது. 1977- 78ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ஹிருபாய் எம் பட்டேல் 800 வார்த்தைகள் கொண்ட இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

வார்த்தை எண்ணிக்கையில், 1991ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்தான் 18,650 வார்த்தைகளைக் கொண்ட மிகப்பெரிய பட்ஜெட். அதற்கடுத்த இடத்தில் 18,604 வார்த்தைகளுடன் அருண் ஜெட்லி 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட் உள்ளது.

Summary

Information about the person who presented the Union Budget the most times, the smallest budget.

மத்திய பட்ஜெட்
பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com