சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்!

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்..

News image
3 மணி நிலவரம்- -
Updated On :20 நவம்பர் 2024, 10:28 am

DIN

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல, ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிர ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 3 மணி நிலவரம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோன்று, ஜார்க்கண்ட் மாநிலத்​தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 61.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 32.18 சதவீத வாக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலத்​தில் 47.92 சதவீத வாக்குகளும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.