

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவு முடிந்தது. மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் இன்று (ஜன. 15) நடைபெற்றது. இத்தேர்தலில் மாலை 3.30 மணி நிலவரப்படி 41.13 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலையொட்டி, பாலிவுட் திரையுலக கலைஞர்கள், சச்சின் டெண்டுகர் உள்பட முக்கிய விளையாட்டு வீரர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்ற நிலையில், பகல் 1.30 மணி நிலவரப்படி தேர்தல் நடைபெற்ற 29 மாநகராட்சிகளிலும் 29.22 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார் 46 - 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கக்கூடும் என்று கணித்திருப்பதாக தெரிவித்தார். இது கடந்த 2017இல் பதிவான வாக்குகளைவிட அதிகமாகும். வெள்ளிக்கிழமை (ஜன. 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.