மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - ஆளும் பாஜக தொடர் முன்னிலை!

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரில் வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கே பிரகாசமாக இருப்பதை வாக்கு எண்ணிக்கை நிலவரம் பிரதிபலிக்கிறது.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - ஆளும் பாஜக தொடர் முன்னிலை!
PTI
Updated on
1 min read

மும்பை : மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால், பல இடங்களில் அதிலும் குறிப்பாக, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரின் ‘ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்ப்பரேசனில்’ வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கே பிரகாசமாக இருப்பதை வாக்கு எண்ணிக்கை நிலவரம் பிரதிபலிக்கிறது.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவு முடிந்தது. மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது. வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார் 46 - 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கக்கூடும் என்று கணித்திருப்பதாக தெரிவித்தார். இது கடந்த 2017இல் பதிவான வாக்குகளைவிட அதிகமாகும். இதனையடுத்து, இன்று (ஜன. 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, மாலையில் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

Summary

Maharashtra civic election results: Mahayuti leads

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com