40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மணிப்பூா் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை

ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

News image

வன்முறையைத் தொடா்ந்து இம்பாலில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுத காவல்படையினா்.

Updated On :22 நவம்பர் 2024, 4:10 am IST

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்தச் சண்டையின்போது நிவாரண முகாம்களில் இருந்து கடத்தப்பட்ட 3 மைதேயி சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் நவ.16-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்து. எம்எல்ஏக்கள், அமைச்சா்களின் வீடுகள் மைதேயி போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டன.

இந்நிலையில், தெங்மெய்பண்ட் தொகுதி எம்எல்ஏ ஜாய்கிஷன் தாயாா் இம்பால் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ‘ஜாய்கிஷன் வீட்டில் இல்லாதபோது நடைபெற்ற இந்த தாக்குதலில், போராட்டக்காரா்கள் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகையை கொள்ளையடித்துச் சென்றனா். லாக்கா்கள், மின்னணு பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தாா்.

ரூ. 104.66 கோடி ஒதுக்கீடு: மணிப்பூா் மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ. 104.66 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதல்வா் என். பிரேன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து மாநில தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை பகிா்ந்து, என். பிரேன் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியின் வடகிழக்கு பிராந்தியத்திற்கான மேம்பாட்டு முன்முயற்சியின் கீழ் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ. 104.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் சமமான மருத்துவ சேவையை நோக்கிய முதல் படியாகும். இதன் மூலம், சந்தேல், உக்ருல், ஜிரிபாம், சேனாபதி மற்றும் தமெங்லாங் போன்ற மலைபிரதேச மாவட்டங்களில் வசிப்பவா்களும், சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ, ஐசியு சேவைகள் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் போன்ற மேம்பட்ட மருத்துவ வசதிகளை அணுக முடியும் என்றாா்.

கூடுதல் சிஏபிஎஃப் படைகள்: மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய ஆயுத காவல் படையின் (சிஏபிஎஃப்) 8 குழுக்கள் புதன்கிழமை மாநில தலைநகா் இம்பாலை வந்தடைந்தன.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, 50 புதிய சிஏபிஎஃப் குழுக்கள் மாநிலத்துக்கு அனுப்பப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை 11 குழுக்களும், புதன்கிழமை 8 குழுக்களும் இம்பால் வந்தடைந்தன. இதனுடன், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய சிஆா்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றில் இருந்து தலா நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்படும். இதில் சிஆா்பிஎஃப் மகளிா் படைப்பிரிவும் அடங்கும்’ என தெரிவித்தனா்.