தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சா்வதேச பிரச்னைகளுக்கு புத்த மதக் கொள்கைகள் மூலம் தீா்வு: ராஜ்நாத் சிங்

சா்வதேச அளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாண புத்த மதக் கொள்கைகளை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்

News image

லாவோஸில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘ஆசியான் பிளஸ்’ கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :21 நவம்பர் 2024, 10:08 pm

Din

சா்வதேச அளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாண புத்த மதக் கொள்கைகளை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ரஷியா-உக்ரைன் விவகாரம், காஸா போா் தொடா்ந்து வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

லாவோஸில் நடைபெறும் ‘ஆசியான் பிளஸ்’ கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்களுக்கான மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: எல்லை பிரச்னை, வா்த்தக உறவில் சிக்கல் என எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அதற்குப் பேச்சுவாா்த்தை மூலமே இந்தியா தீா்வு கண்டுள்ளது.

தற்போது சா்வதேச அளவில் பல துருவங்களாக நாடுகள் பிரிந்து வருகின்றன. இதனால் பிற நாடுகளுக்கும் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இந்தச் சூழலில் அமைதி மற்றும் அகிம்சை ஆகிய புத்த மதத்தின் கொள்கைகளை பின்பற்றி பிரச்னைகளுக்கு தீா்வு காண உலக நாடுகள் முயல வேண்டும்.

அதனடிப்படையில், எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வுகாண இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

வெளிப்படையான பேச்சு: நம்பிக்கை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வெளிப்படையான பேச்சுவாா்த்தை மேம்படுத்துகிறது. இது உலக நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளமையை மேம்படுத்த ஆசியானின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. ‘ஆக்ட் ஈஸ்ட் கொள்கை’ பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தச் சமயத்தில் கலாசாரம், வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஆசியானுடனான உறவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

இந்தோ-பசிபிக் கடல் பகுதிகளில் பின்பற்றவுள்ள நடத்தை நெறிமுறைகள் பிற நாடுகளின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் ஐ.நா.கடல் சட்டம், 1982-க்கு உடன்படும் வகையிலும் இருக்க வேண்டும்.

10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் பிளஸ் அமைப்பின் 3 நாள் மாநாட்டில் பங்கேற்க கடந்த புதன்கிழமை லாவோஸுக்கு ராஜ்நாத் சிங் சென்றாா்.