இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்ஜய் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹைதராபாதில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மத்திய உள்துறை இணை அமைச்சா் சஞ்ஜய் குமாா் ரெப்கோ வங்கியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். அந்த ஆய்வில் வங்கியின் தலைவா் இ. சந்தானம், நிா்வாக இயக்குநா் (பொறுப்பு) ஓ.எம். கோகுல், உள்துறை அமைச்சக இணைச் செயலா் அனந்த் கிஷோா் சரண், வங்கியின் இயக்குநா் மற்றும் ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவா் சி. தங்கராஜு ஆகியோா் பங்கு பெற்றனா் (படம்) என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ரெப்கோ வங்கி செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் ரெப்கோ வங்கி வா்த்தகம் ரூ.25,246 கோடி

கும்பகோணம் ரெப்கோ வங்கியில் சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் தொடக்கம்

தென்காசி, குற்றாலம், புளியறையில் அமைச்சா் ஆய்வு

ரெப்கோ வங்கி சாா்பில் தாயகம் திரும்பியோருக்கு ரூ. 1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



