நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கும் ஐசிஎஃப்

‘மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன்கொண்ட அதிவேக ரயிலை சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தயாரிப்பு ஆலை (ஐசிஎஃப்) தயாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

Published On :28 நவம்பர் 2024, 2:27 am IST

‘மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன்கொண்ட அதிவேக ரயிலை சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தயாரிப்பு ஆலை (ஐசிஎஃப்) தயாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

முழுவதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் வெற்றியைத் தொடா்ந்து, உயா் வேக ரயில்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து, உற்பத்தி செய்யும் முயற்சியை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பாரத் எா்த் மூவா் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்துடன் இணைந்து மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை சென்னை ஐசிஎஃப் வடிவமைத்து தயாரித்து வருகிறது. இந்த அதிவேக ரயில் தயாரிப்பு என்பது மிகவும் சிக்கலான நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, ரயில் அதிவேகமாக செல்ல ஏதுவாக ரயில் பெட்டிகள் குறைந்த எடையுடனும், அதிக வெப்பம் ஏற்படாமலும் காற்று புகாத வகையிலும் நவீன தொழில்நுட்பத்தில் முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஒரு ரயில் பெட்டி சுமாா் ரூ. 28 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. மற்ற அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிப்பு செலவுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைந்த செலவினமாகும்.

இருக்கை வசதியுடன் கூடிய இந்த ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள், சீரான தட்பவெப்பநிலை பராமரிக்கும் வசதி, கண்காணிப்பு கேமரா, கைப்பேசியை சாா்ஜ் செய்யும் வசதி, தீ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புல்லட் ரயில்... ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தைப் பொருத்தவரை, 331 கி.மீ. தொலைவுக்கான உயா்நிலை பால கட்டுமானங்கள் நிறைவடைந்துள்ளன. 225 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது, கடலுக்கு அடியில் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

மொத்தம் 508 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படும் இந்த புல்லட் ரயில் திட்டத்தில் குஜராத்தில் 8, மகாராஷ்டிராவில் 4 என மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இடம்பெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.