அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று(நவ. 27) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று(நவ. 26) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது.
தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
அதன்படி, மாநிலங்களவை நாளை(நவ. 28) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவையின் மரபுகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அதானியைப் பாதுகாக்கிறதா மத்தியஅரசு? கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்!
மக்களவை ஒத்திவைப்புக்குப் பிறகு நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளன.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு கொடுத்ததாக அதானி குழும தலைவர் கௌதம் அதானி, அதானி க்ரீன் எனர்ஜி செயல் இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதானியை மத்திய பாஜக அரசு பாதுகாப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.