சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாஜகவின் முடிவை ஏற்க மறுக்கிறாரா ஏக்நாத் ஷிண்டே?

தவறை சரி செய்யவும் அதேவேளையில் கூட்டணியைக் கட்டிக்காக்கவும் முயற்சிக்கிறது பாஜக!

News image
அமித் ஷாவுடன் மகாயுதி கூட்டணித் தலைவர்கள்
Updated On :29 நவம்பர் 2024, 7:10 am

DIN

மகாராஷ்டிரத்தில் கூட்டணியைக் கட்டிக்காக்கும் வகையில், ஏக்நாத் ஷிண்டேவை துணை முதல்வர் பொறுப்பேற்க வலியுறுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.

மகாராஷ்டிர முதல்வராக இருந்த பாஜக தலைவர் பட்னவீஸ், கூட்டணி அமைத்தபோது கட்சியின் நலனுக்காக துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அந்த தவறை சரி செய்யும் வகையில், தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருப்பதால் பட்னவீஸ் முதல்வர் பதவியை வகிப்பார் என்று தெரிகிறது.

எனினும், கூட்டணி தர்மத்தை பாஜக மதிக்கிறது என்பதையும் ஒற்றுமையை உலகுக்குத் தெரிவிக்கவும் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, கூட்டணிக் கட்சிகளும், பிரதமர் நரேந்திர மோடியும் என்ன முடிவெடுக்கிறார்களோ அதற்குக் கட்டுப்படுவதாக அஜித் பவார் கூறிவிட்டதால், அவரை சமாதானம் செய்யும் வேலை பாஜகவுக்கு இல்லை. ஆனால், கூட்டணி அமைக்கும்போது முதல்வராக ஏற்றுக்கொண்டு தற்போது பதவியிலிருந்து இறக்கிவிடுவதாக ஏக்நாத் நினைக்கக்கூடாதே என்பதற்காக அவரை சமாதானம் செய்ய வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது.

ஆனால், முதல்வராக இருந்துவிட்டு துணை முதல்வர் பதவியை ஏற்க ஷிண்டேவுக்கு மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை சிவ சேனை எம்எல்ஏ சஞ்சய் ஷிர்சத்தும் உறுதி செய்திருக்கிறார். அதேவேளையில், மராத்தா சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்குவதை பிற சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களை ஏமாற்றுவதாக இருக்கும் என்றும் கட்சிக்குள் பேச்சு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.