ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம்: தேர்தலில் எதிரொலிக்க வேண்டும்! -கார்கே

மாநில அந்தஸ்து விவகாரம்: தேர்தலில் பாடம் புகட்டவும் -வாக்காளர்களுக்கு காங். தலைவர் கார்கே...
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம்: தேர்தலில் எதிரொலிக்க வேண்டும்! -கார்கே
PTI
Published on
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள விவகாரத்தை, தேர்தல் நாளான இன்று(அக். 1), வாக்காளர்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தியுள்ளார் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, கடந்த 2019-இல் ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் தோ்தல் என்பதால் கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைதளப் பதிவில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரத்தை வாக்காளர்களுக்கு நினைவூட்டியுள்ளர்.

அவர் கூறியிருப்பதாவது, “ஜம்மு காஷ்மீர் மக்களிடமிருந்து மாநில உரிமையைப் பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட இதுவே கடைசி வாய்ப்பு.

ஒவ்வொரு ஓட்டும் உங்கள் தலைவிதியை மாற்றியமைக்கும், ஒளிமயமான வருங்காலத்தை உண்டாக்கும், இதன்மூலம், உங்கள் அரசமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படும்.

முதல் முறை வாக்காளர்களை நாங்கள் வரவேற்கிறோம், ஜம்மு காஷ்மீரின் வருங்காலம் முதல் முறை வாக்காளர்களின் பங்களிப்பால் தீர்மானிக்கப்படும்.

ஆகவே வாக்கு செலுத்துமாறு உங்களை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். 40 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்ந்த மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.