குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காந்தி இன்று உயிரோடு இருந்திருந்தால்... ப. சிதம்பரத்தின் கேள்விகள்!

மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க ஒப்புதல் அளித்திருப்பாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி.

News image

ப.சிதம்பரம்

Updated On :2 அக்டோபர் 2024, 6:06 pm IST

மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க ஒப்புதல் அளித்திருப்பாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காந்தி ஜெயந்தியையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர், நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பார் என காந்தியின் குடும்பத்தில் ஒருவரின் அறிக்கையைப் படித்தேன்.

அதைப் படித்துவிட்டு என்னையே நான் கேட்டுக்கொள்ளும் கேள்விகள்...

சாதி, மதங்களைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்கள் மீதான தாக்குதல்களை காந்தி அங்கீகரித்திருப்பாரா?

ஆக்கிரமிப்பு என்று கூறி ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?

விரும்பாத மக்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?

இந்தியாவின் மக்கள்தொகையில் மேலே உள்ள1 சதவீதத்தினருக்கும் கீழ்மட்டத்தில் உள்ள 10/20 சதவீதத்தினருக்கும் இடையிலான சமத்துவமின்மையை விரிவுபடுத்தும் கொள்கைகளை காந்தி அங்கீகரித்திருப்பாரா?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக குறைக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?

இந்த பட்டியல் தொடர்கிறது...' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.