பணமில்லையெனில் விளையாட வாய்ப்புமில்லை! களநிலவரம் இதுதான் -ராகுல் வேதனை
விளையாட்டு வீரர்களின் அவலநிலை! எதிர்க்கட்சித் தலைவர் வேதனை...


இந்தியாவில் பணமில்லையெனில் விளையாட வாய்ப்பும் கிடைப்பதில்லை என்றும் விளையாட்டு வீரர்கள் அவலநிலையில் இருப்பதாகவும் வேதனையைப் பதிவு செய்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
நாடெங்கிலும், குறிப்பாக ஹரியாணாவில் உள்ள விளையாட்டு வீரர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் படும் கஷ்டங்களை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் அவர்.
ராகுல் காந்தி இன்று(அக். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ”பணமில்லை என்றால், விளையாட்டுமில்லை - இதுவே இந்தியாவில் இன்று பெரும்பாலான விளையாட்டு வீரர்களின் நிலைமை.
விளையாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன். அடிப்படை வசதிகளான உணவு, ஓய்வு, பயிற்சி ஆகியவை வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாதபோது ஏற்படும் இழப்பைவிட, இது இந்தியாவுக்கான பெரிய இழப்பு.
விளையாட்டு வீரர்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் ஒரு அமைப்பை நாம் கொண்டுவராவிட்டால், அதேபோல, விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக விளையாட்டு வீரர்கள் நியமிக்கப்படாவிட்டால், இந்தியா தனது முழு ஆற்றலை எட்ட இயலாது.
இந்தியாவில் ஏராளமான திறமை குவிந்து கிடக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் சரிசமமான பலன் கிடைப்பதை உறுதிசெய்ய வெளிப்படைத்தன்மையும், நியாயமான முறையிலான அமைப்பும், அனைத்து அடிப்படை வசதிகளும் வீரர்களுக்கு கிடைத்திடும் வாய்ப்பயும் ஏற்படுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...