கோப்புப் படம்
கோப்புப் படம்

புகை எச்சரிக்கை: புறப்பட்டவுடன் தரையிறங்கிய ஏா் இந்தியா விமானம்

கேரளத்தில் இருந்து மஸ்கட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தில் புகைக் கசிவு எச்சரிக்கை ஒலி எழுந்ததையடுத்து
Published on

கேரளத்தில் இருந்து மஸ்கட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தில் புகைக் கசிவு எச்சரிக்கை ஒலி எழுந்ததையடுத்து, அந்த விமானம் அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நிகழ்ந்தது. விமானத்தில் பயணித்த 142 பயணிகள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். விமானத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புகைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

இது தொடா்பாக ஏா் இந்தியா செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. புகையின் காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஏா் இந்தியா விமான செயல்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இருப்பினும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்’ எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com