முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு: இது துர்கா பூஜைக்கான சிறப்பு மெனு!

மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு என சிறைக் கைதிகளுக்கு துர்கா பூஜையை முன்னிட்டு வழங்க திட்டம்

News image

துர்கா பூஜை

Updated On :5 அக்டோபர் 2024, 1:37 pm IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகள், துர்கா பூஜையை முன்னிட்டு, சிறைக் கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாள்களிலாவது தங்களுக்கு நல்ல சாப்பாடு வழங்குமாறு சிறைக் கைதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு, பிரிஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தின் பாரம்பரிய உணவுகளை சிறைக் கைதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் அனைவருக்கும், அக்டோபர் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மதிய மற்றும் இரவு உணவுகள் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பண்டிகை நாள்களிலாவது நல்ல உணவு வழங்க வேண்டும் என்று சிறைக் கைதிகளிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய உணவு வகைகளால், அவர்களது முகங்களில் மகிழ்ச்சியை பார்க்க முடியும் என நம்புகிறோம். அவர்களுக்காக எடுக்கப்படும் இந்த மாற்றம் நல்லதாக அமையும் என நம்புவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டன் பிரியாணி மட்டுமல்லாமல், மீன் இறைச்சியுடன் மலபார் ஸ்பினாச், மீன் இறைச்சி மற்றும் பருப்புக் கடையல், பூரி - கொண்டைக்கடலை, சிக்கன் தொக்கு, பாஸ்மதி அரிசியில் செய்த புலாவ் வகைகளும் ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தனித்தனியாக உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப பரிமாறப்படவிருக்கிறதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.